No results found

    சோழசிராமணியில் போலீசாரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


    ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம்பெண் நித்யா (28) கடந்த மார்ச் 11-ந் தேதி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அப்பாவி விவசாயிகளையும், இளைஞர்களையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று செய்யாத குற்றத்தை நிர்பந்தப்படுத்தி ஏற்றுக்கொள்ள செய்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஜேடர்பாளையம் போலீசாரின் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல் கார்த்திகேயன் பேசும்போது, ஜேடர்பாளையம் போலீசார் வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்காமல் பாதிக்கப்பட்ட நித்தியாவின் சமூகத்தை சேர்ந்த வர்களையும் உறவினர்களையும் தேடி தேடி பிடித்து போய் வழக்கு களை போட்டு சிறையில் அடைத்து வருகின்றனர் இது கண்டிக்கத்தக்கது என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர், கரும்பு விவசாயிகள் சங்க த்தைச் சேர்ந்த காத்தவராயன், மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பள்ளிபாளையம் ரவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன்மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பூபதி ஜோதி வேலாயுதம் சண்முகம் தனேந்திரன் கிருஷ்ணன் மொளசி பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال