No results found

    பரமத்தி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


    நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-– 2023-ன் கீழ், ரூ.15.71 லட்சம் மதிப்பீட்டில் பரமத்தி, ஜேடர்பாளையம் சாலை முதல் சூரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை சாலை பலப்படுத்தும் பணி, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் நியாய விலைக் கடையை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ரூ.414.92 லட்சம் மதிப்பீட்டில் அர்த்தனாரிபாளையம் முதல் நாமக்கல் - வேலூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமையக்கும் பணி, வில்லிபாளையம் ஊராட்சியில் ரூ.18.99 லட்சம் மதிப்பீட்டில் பாண்டியன் குட்டை வாய்க்காலை ஆழப்படுத்தி கரையை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெ்கடர் உமா பேசியதாவது:- பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்க ளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். பொதுமக்களின் அன்றாட தேவைகளை நன்கு உணர்ந்தவர்கள். பொது மக்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பொது மக்க ளுக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கும் பாலமாக விளங்க கூடியவர்கள்.

    எனவே தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திட முக்கியத்துவம் வழங்கிட வேண்டும். தங்களது ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர், சுகாதார மான சூழல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதே போன்று உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் தற்போது மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அலுவலர்கள் ஒரு குழுவாக இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக வளர்ச்சி பெற்றிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பொத்தனூர் பேரூராட்சி, ஜேஜே நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன் முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், பரமத்தி வட்டாட்சியர் கலைச்செல்வி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, நடராஜன், போத்த னூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் மற்றும் அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال